பிக் பேஷ் ரி-20 லீக் தொடரின் ஆறாவது லீக் போட்டியில், அடிலெய்ட் ஸ்ட்ரைக்கஸ் அணி 49 ஓட்டங்களால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.
அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், அடிலெய்ட் ஸ்ட்ரைக்கஸ் அணியும் மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அடிலெய்ட் ஸ்ட்ரைக்கஸ் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அடிலெய்ட் ஸ்ட்ரைக்கஸ் அணி, 19 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 149 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, வெல்ஸ் 37 ஓட்டங்களையும் ஷோர்ட் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணியின் பந்துவீச்சில், கேன் ரிச்சட்சன் 4 விக்கெட்டுகளையும் டொப்லே 3 விக்கெட்டுகளையும் சஹூர் கான் 2 விக்கெட்டுகளையும் ஜேம்ஸ் பெட்டின்சன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 150 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணி, 18.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 100 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதனால் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கஸ் அணி 49 ஓட்டங்களால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சேம் ஹார்பர் 33 ஓட்டங்களையும் மெக்கென்ஸி ஹார்வீ 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
அடிலெய்ட் ஸ்ட்ரைக்கஸ் அணியின் பந்துவீச்சில், வெஸ் அகர் 3 விக்கெட்டுகளையும் ராஷித் கான் மற்றும் டேனியல் வோரல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ஜோர்ஜ் கார்டன் மற்றும் பீட்டர் சிடில் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, பந்துவீச்சில், விக்கெட்டுகளை வீழ்த்திய வெஸ் அகர் தெரிவுசெய்யப்பட்டார்.