அமெரிக்காவின் கென்டக்கி, அர்கன்சாஸ் உள்ளிட்ட மாகாணங்களில் சூறாவளிக் காற்று வீசியதில் 50 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அர்கன்சாஸ், இல்லினாய்ஸ், கென்டக்கி உள்ளிட்ட மாகாணங்களில் சூறாவளி காற்று வீசியது.
இதனையடுத்து, கட்டடங்கள், வாகனங்கள் உள்ளிட்டவை சேதமான நிலையில் சுமார் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் பேர் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரிக்கும் வாய்புள்ளதாக கென்டக்கி மாகாண ஆளுநர் ஆண்டி பெஷேர் அச்சம் வெளியிட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வரலாற்றில் கென்டக்கி மாகாணம் எதிர்கொண்ட சூறாவளியிலேயே இது மிக கடுமையானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.