பொறுப்பற்ற ஆட்சியாளர்களினால் முழு நாடும் அபாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தற்போதைய அரசாங்கம், தமக்கு சாதகமான தீர்மானங்களை கொண்டு வந்து நாட்டை மோசமான நெருக்கடிக்குள் தள்ளியுள்ளதாக சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தினார்.
இதேவேளை நாட்டில் கொரோனா மரணங்கள் நாளாந்தம் பதிவாகின்றன. ஆனால் இது தொடர்பாக எந்தவொரு நடவடிக்ககையினையும் அரசாங்கம் எடுக்காதமையினால் தற்போது கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை அண்மித்துள்ளதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையில் சமையல் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவங்கள் 620க்கும் அதிகமாக பதிவானபோதும் கூட உரிய விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கம் தவறியுள்ளது என சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.
அந்தவகையிழல் தற்போது இலங்கை ஏல விற்பனை பூமியாக மாற்றப்பட்டுள்ளது. வெளிநாட்டவர்களுக்கும் நட்புறவு கொண்டாடும் கும்பலுக்கும் நாட்டின் தேசிய வளத்தை தாரைவார்த்து கொண்டிருக்கும் தருவாயில் அமைச்சரவை வெறும் சமிக்ஞை தூணாக மாறியுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.