இலங்கையில் கொரோனா தொற்றினால் ஏற்படும் இறப்பு வீதம் குறைவதற்கு தடுப்பூசி நடவடிக்கையே காரணம் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
இருப்பினும், தடுப்பூசியை செலுத்திக்கொண்டு பின்னரும் சுகாதார வழிகாட்டுதல்களை அவசியம் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
நாட்டு மக்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதோடு கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையினால் சிறுவர்கள் உட்பட தத்தமது குடும்ப உறுப்பினர்களை தொற்று நோயில் இருந்து காப்பாற்ற முடியும் என்றும் உபுல் ரோஹன குறிப்பிட்டார்.