இந்தியாவில் அடுத்த ஆண்டு கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இதன்படி அடுத்த ஆண்டில் 500 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சிஐஐ மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், தனது சொந்த மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கும், உலகின் பிற பகுதிகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கும் இந்தியா பிரகாசமான எடுத்துக்காட்டுகளில் ஒன்றாக விளங்குகிறது எனக் கூறியுள்ளார்.
அனைத்து நாடுகளுக்கும் தடுப்பூசிகள் மலிவு விலையில் சமமாக கிடைப்பதை உறுதி செய்ய தேவைப்படும் அளவுக்கு தடுப்பூசிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.