மன்னார்- கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு மீனவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் காணாமல் போன நிலையில், ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டிருந்தது. தற்போது மற்றைய நபரின் சடலமும் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம்- பருத்தித்துறையை சேர்ந்த தர்ஷன் (வயது-19) என்பவரே நேற்று காலை, சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து காணாமல் போயிருந்த மற்றையவரான அதே இடத்தைச் சேர்ந்த செந்தூரன்-(வயது-28) என்கின்ற இரண்டு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்தரை தேடும் நடவடிக்கையில் மீனவர்கள் ஈடுபட்டிருந்தனர்.
ஆனாலும் நேற்று மாலை வரை குறித்த மீனவரை கண்டுப்பிடிக்க முடியவில்லை. இந்நிலையில் இன்று காலை, மன்னார்- உப்பளம் கடற்கரை பகுதியில் குறித்த மீனவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
குறித்த சடலம் தற்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மாவட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார்- கோந்தைபிட்டி கடலில் காணாமல் போனவர்களில் ஒருவர் சடலமாக கண்டெடுப்பு