இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட குறித்த வைரஸ், உலகம் முழுவதும் பரவிவருகின்ற நிலையில், இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ளது.
இதன்படி டெல்லியில் 6 பேரும், மகாராஷ்டிராவில் 28 பேரும், ராஜஸ்தானில் 9 பேரும், கர்நாடகத்தில் 3 பேரும், குஜராத்தில் 4 பேரும், கேரளா, ஆந்திரா, மற்றும் சண்டிகரில் தலா ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இதேவேளை ஒமிக்ரோன் தொற்று பரவி வரும் நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் பரிசோதனை செய்வதற்கு முன்பதிவு செய்ய வேண்டும் எனவும் மத்திய விமானப் போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி சென்னை, டெல்லி, ஹைதராபாத், மும்பை, கொல்கத்தா, பெங்களுர், மும்பை உள்ளிட்ட ஆறு இடங்களில் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் முன்பதிவு செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.