ஆபிரிக்காவில் இந்த ஆண்டு கொரோனா தொற்றுப் பரவல் மிக வேகமாகப் பரவிவருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் மட்டும் அங்கு கொரோனா தொற்று உறுதியான நோயாளிகளின் எண்ணிக்கை 83 விகிதமாக அதிகரித்துள்ளன.
இருப்பினும் ஆபிரிக்காவில் கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என உலகச் சுகாதார ஸ்தாபனம் தெரிவித்தது.
இந்த தொற்று பரவல் அதிகரித்ததற்கு டெல்டா, ஒமக்ரோன் மாறுபாடே காரணம் என்றும் உலகச் சுகாதார ஸ்தாபனம் தெரிவித்தது.
தற்போது ஆபிரிக்காவில் 5 நாள்களுக்கு ஒருமுறை நாளாந்தம் நோய்த்தொற்றுச் சம்பவங்கள் இரட்டிப்பாகின்றன.
ஆபிரிக்காவில் தடுப்பூசி போட்டுக்கொண்டோரின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் புது மாறுபாடு உருவாவதற்கு காரணமாக அமைவதாக நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
போதுமான வளங்கள் இல்லாததால் தடுப்பூசி பெறுவதிலும் ஆபிரிக்க நாடுகள் சிரமத்தை எதிர்நோக்குகின்றமை குறிப்பிடத்தக்கது.