ஒமக்ரோன் மாறுபாடு முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் உலகம் முழுவதும் பரவி வருவதாக உலகச் சுகாதார ஸ்தாபனம் கூறியுள்ளது.
அதைக் கட்டுப்படுத்த நாடுகள் துரிதமாகச் செயல்பட வேண்டும் என்றும் அதன் தலைமை பணிப்பாளர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார்.
இதுவரை ஒமக்ரோன் மாறுபாடு 77 நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மாறுபாட்டைச் சமாளிக்க அந்நாடுகள் போதுமான அளவு செய்யப்படவில்லை என்றும் கவலை வெளியிட்டார்.
இதேநேரம் இதற்கு முன்னர் பரவிய கொரோனா மாறுபாடுகளை விட ஒமிக்ரோன் மாறுபாடு அடையாளம் காணப்படாமலேயே பரவியிருக்கக்கூடும் எனத் தாம் நம்புவதாக அவர் கூறினார்.
ஒமிக்ரோன பரப்பும் நோய் மிதமானது என முடிவுக்கு வரவேண்டாம் என உலக சுகாதார ஸ்தாபனத்தை சேர்ந்த நிபுணர்களும் எச்சரித்துள்ளனர்
அவ்வாறு எண்ணினால் உலகம் மிக ஆபத்தான நிலைமையைச் சந்திக்க நேரலாம் என்று அவர்கள் அச்சம் தெரிவித்தனர்.