கொரோனா தொற்றின் புதிய மாறுபாட்டின் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அமுல்படுத்தப்பட்ட வழிகாட்டுதலைகளை பின்பற்றுமாறு மொசாம்பிக் ஜனாதிபதி பிலிப் மியூசி மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
எனவே அனைவரும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், தடுப்பூசி போடப்படாதவர்களுக்கு கட்டுப்பாடுகளை எந்த நேரத்திலும் அறிவிக்கலாம் என்றும் எதிர்வு கூறியுள்ளார்.
நாளாந்தம் அடையாளம் காணப்படும் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை சமீபத்திய நாட்களில் அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக கடந்த 24 மணிநேரத்தில் 700 க்கும் மேற்பட்ட நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள அதேநேரம் ஒமிக்ரோன் தொற்று உறுதியான 17 நோயாளிகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.