ஆண்களுக்கு திருமண வயது 21 என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்தும் பரிந்துரைக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதலுக்கு பின்னர் சட்டமாக அமுலுக்கு வருகிறது.
இந்த நிலையில் பெண்ணின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை தே.மு.தி.க. வரவேற்பதாக அதன் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, வாக்குரிமை 18 வயது, திருமணம் 21 வயதா? என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.
ஆண்களுக்கு திருமண வயது 21 என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மத்திய அரசு இது குறித்து தெளிவு படுத்த வேண்டும் என்று தமது ருவிட்டர் பதிவில் விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.