ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியின், மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
இதன்படி இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, இன்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், 1 விக்கெட் இழப்புக்கு 45 ஓட்டங்களை பெற்றுள்ளது.
ஆட்டநேர முடிவில், மைக்கேல் நீஸர் 2 ஓட்டங்களையும் மார்கஸ் ஹரிஸ் 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இங்கிலாந்துக் கிரிக்கெட் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், அவுஸ்ரேலியா அணி 282 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.
அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி, 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 473 ஓட்டங்களை பெற்றிருந்த போது, தனது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மார்னஸ் லபுஸ்சேகன் 103 ஓட்டங்களையும் டேவிட் வோர்னர் 95 ஓட்டங்களையும் ஸ்டீவ் ஸ்மித் 93 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இங்கிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளையும் ஜேம்ஸ் எண்டர்சன் 2 விக்கெட்டுகளையும் ஸ்டுவர்ட் பிரோட், கிறிஸ் வோக்ஸ், ரொபின்சன் மற்றும் ரூட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸிற்காக 236 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டாவிட் மாலன் 80 ஓட்டங்களையும் ஜோ ரூட் 62 ஓட்டங்களையும் பெ;றறுக்கொண்டனர்.
அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மிட்செல் ஸ்டாக் 4 விக்கெட்டுகளையும் நாதன் லியோன் 3 விக்கெட்டுகளையும் கிறீன் 2 விக்கெட்டுகளையும் மைக்கேல் நீஸர் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து தற்போது இரண்டாவது இன்னிங்ஸிற்காக அவுஸ்ரேலியா அணி துடுப்பெடுத்தாடி வருகின்றது. இதன்படி இன்றைய ஆட்டநேர முடிவில், 1 விக்கெட் இழப்புக்கு 45 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இன்னமும் 9 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் நான்காவது நாள் ஆட்டத்தை அவுஸ்ரேலியா அணி, நாளை தொடரவுள்ளது.