கிறிஸ்துமஸ் நெருங்கிவரும் நிலையில் ஒமிக்ரோன் மாறுபாடு குறித்த கவலைகளுக்கு மத்தியில் நெதர்லாந்து கடுமையான முடக்க கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
அதன்படி அத்தியாவசியமற்ற கடைகள், பார்கள், ஜிம்கள் முடி வெட்டும் நிலையங்கள் மற்றும் பிற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஜனவரி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சாதாரண நாட்களில் ஒரு வீட்டிற்கு இரண்டு விருந்தினர்கலும் விடுமுறை நாட்களில் நான்கு பேரும் அனுமதிக்கப்படுவார்கள் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை முதல் அமுலுக்கு வரும் இந்த கட்டுப்பாடுகள் தவிர்க்க முடியாதவை என நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே தெரிவித்துள்ளார்.
மேலும் இதன்போது அனைத்து பாடசாலைகளும் குறைந்தது ஜனவரி 9 ஆம் திகதி வரையும், மற்ற கட்டுப்பாடுகள் குறைந்தது ஜனவரி 14 வரை இருக்கும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பெரிதும் மாற்றமடைந்த மாறுபாடு பரவுவதால் ஐரோப்பா முழுவதும் உள்ள நாடுகள் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளன.