ஒமிக்ரோன் மாறுபாட்டின் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பும் பயணிகளுக்கு ஜேர்மனி தடை விதித்துள்ளது.
இருப்பினும் பிரித்தானியாவில் உள்ள ஜேர்மன் பிரஜைகள் நாடு திரும்புவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அந்நாட்டு அரசாங்கம் கூறியுள்ளது.
தடுப்பூசி செலுத்தியுள்ளார்களா என்பதை கருத்திற்கொள்ளாமல் கொரோனா தொற்று இல்லை என்ற அறிக்கை மற்றும் இரு வார தனிமைப்படுத்தல் என்ற கட்டுப்பாட்டின் கீழ் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.
பிரான்ஸ் ஏற்கனவே இதுபோன்ற கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் ஜேர்மனியின் இந்த கட்டுப்பாடு, நாளை திங்கட்கிழமை முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் மிக வேகமாக ஒமிக்ரோன் மாறுபாடு பரவிவரும் நிலையில் அங்கு நேற்று மேலும் 90,418 கொரோனா தொற்று உறுதியான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை டென்மார்க், பிரான்ஸ், நோர்வே மற்றும் லெபனான் ஆகிய நாடுகளும் ஜேர்மனியின் அதிக ஆபத்து உள்ள நாடுகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.