இரண்டு நாட்களில் 900க்கும் மேற்பட்டோர் சிறிய படகுகளில் கால்வாயைக் கடந்துள்ளனர் என்று உள்துறை அலுவலகம் உறுதி செய்துள்ளது.
வியாழக்கிழமை அன்று கென்ட் கடற்கரையிலிருந்து 19 படகுகளில் 559 பேரும், வெள்ளிக்கிழமை 10 படகுகளில் 358 பேரும் சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் இரண்டு நாட்களில் பிரெஞ்சு அதிகாரிகளால் 564 பேர் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இதுவரை 27,700 க்கும் அதிகமானோர் சிறிய படகுகளில் கடந்து சென்றுள்ளனர்.
மேலும் கடந்த மாதம் கலேஸ் அருகே படகு மூழ்கியதில், ஒருவர் கர்ப்பிணி பெண் உட்பட ஏழு பெண்கள் 17 ஆண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் உட்பட 27 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.