ஒமிக்ரோன் வைரஸ் வேகமாகப் பரவி வருகின்ற சூழ்நிலையில், எத்தகைய சவாலையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என மத்திய அரசுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைமை வைத்தியர் ரந்தீப் குலேரியா அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்ற நிலையில், அவர் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.
இந்தியாவில் இதுவரை 153 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளவர்களும் விரைவாக பாதிக்கப்படுவால் அவதானமாக இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வது உயிரிழப்பை தடுக்கும் என விஞ்ஞானிகள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.