அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் 5 மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில் இன்று (திங்கட்கிழமை) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நுவரெலியா, மன்னார், திருகோணமலை, இரத்தினபுரி மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அந்த சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதித்துவம் இல்லாமல் சுகாதார அமைச்சினால் 500 வைத்தியர்களுக்கான நியமனப் பட்டியல் வெளியிடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தெ இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.