இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை ஒரு வாரத்திற்குள் கைது செய்யுமாறு கோரி லெட்டர் டிமான்ட் எனப்படும் கோரிக்கை கடிதம் அனுப்பட்டுள்ளது.
தமிழ் அரசியல் கைதிகள் சிலருக்கு துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து சி.ஐ.டி.யில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைவாக அவரை ஒரு வாரத்திற்குள் கைது செய்யாவிட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவித்து சட்டத்தரணி பிரபோத ரத்நாயக்கவினால் பொலிஸ்மா அதிபருக்கு குறித்த கோரிக்கை கடிதம் அனுப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் சி.ஐ.டி.க்கு முறைப்பாடளித்த சட்டத்தரணி சேனக பெரேரா மற்றும் சுதேஷ் நந்திமால் ஆகிய இருவரின் அலோசனைக்கு அமைய இந்த கடிதத்தை அனுப்புவதாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.