அண்மைக்காலமாக நாட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் ஆரம்ப கட்ட பணிகள் ஜனவரி 03 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
இது நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய ஊக்கத்தை அளிக்கும் என துறைமுக அதிகாரசபையின் வர்த்தக மற்றும் கைத்தொழில் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளர் தெரிவித்தார்.
அதன்பிரகாரம் கிழக்கு முனையத்தின் முதற்கட்ட பணிகளை ஆரம்பிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வெளிநாட்டிற்கு விற்கவோ அல்லது குத்தகைக்கு வழங்கவோ கூடாது என கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.
இதனை அடுத்து இந்தியாவுடன் எட்டியிருந்த ஒப்பந்தத்தை மீறி துறைமுக அதிகார சபையே அதனை அபிவிருத்தி செய்யும் என அரசாங்கம் அறிவித்திருந்தது.