சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்படும் அபாயம் காணப்படுவதாக தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.
நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த ஆனந்த பாலித, எரிசக்தி அமைச்சரின் கருத்துக்கள் இதனை உறுதிப்படுத்துவதாக தெரிவித்தார்.
எரிபொருளை கொள்வனவு செய்ய அரசாங்கம் கடன்களை பெற்றுக்கொள்ள தவறியமை காரணமாக எதிர்காலத்தில் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படும் என கூறினார்.
ஒரு வருட காலத்திற்கு எண்ணெய் கொள்வனவு செய்வதற்கு ஓமானிடம் இருந்து 3.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுவதாக எரிசக்தி அமைச்சர் கூறியிருந்தாலும் அதனை அரசாங்கம் பெற்றுக்கொள்ளப்போவதில்லை என ஆனந்த பாலித குறிப்பிட்டார்.
மேலும் எரிபொருள் கொள்வனவிற்காக இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் டொலர்களை பெறவுள்ளதாக அமைச்சர் கூறியிருந்தாலும் நிதியமைச்சர் இந்தியாவிடமிருந்து எரிபொருளை மாத்திரம் கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார் என கூறினார்.
எனவே 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை நாடு பெறாவிட்டால் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை மூட வேண்டி ஏற்படும் என ஆனந்த பாலித தெரிவித்தார்.