பாகிஸ்தான் – சியல்கோட்டில் இலங்கை பிரஜையான பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து இன்று (திங்கடகிழமை) பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவுள்ளது.
பிரதமர் இம்ரான் கானின் தீர்மானத்துக்கு அமைய, இந்த விவாதம் நடைபெறவுள்ளதாக இலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி, இன்றும் நாளை மறுதினமும் இந்த விடயம் குறித்த விவாதம் இடம்பெறும் என தெரிவிக்கப்ட்டுள்ளது.
இஸ்லாம் மதத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு, இஸ்லாமிய அடிப்படைவாதிகளினால் பாகிஸ்தான் – சியல்கோட்டில் அவர் எரித்து கொலை செய்யப்பட்டிருந்தார்.
இதனையடுத்து, பிரியந்த குமாரவின் படுகொலைச் சம்பவம் தொடர்பாக இதுவரை 85 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.