யாழ்ப்பாணம் – காரைநகர் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடைவையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
காரைநகர் பிரதேச சபையின் விசேட அமர்வு இன்று தவிசாளர் மயிலன் அப்புத்துரை தலைமையில் சபை மண்டபத்தில் கூடியது.
ஏற்கனவே வரவு செலவுத் திட்டம் தேற்கடிக்கப்பட்டமையினால் திருத்தங்களுடன் முன்வைக்கப்பட்ட குறித்த வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
11 உறுப்பினர்களைக்கொண்ட காரைநகர் பிரதேச சபையில், குறித்த வரவு செலவுத் திட்டத்திற்கு சுயேச்சை குழுவின் 3 உறுப்பினர்கள், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 2 உறுப்பினர் என 5 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
இதேநேரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 3 உறுப்பினர்கள், ஐக்கிய தேசிய கட்சியின் 2 உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஒரு உறுப்பினர் என 6 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் வரவு செலவுத் திட்டம் 1 மேலதிக வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இரண்டு தடவைகள் காரைநகர் பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டதால் தவிசாளரும் தனது பதவியை இழந்துள்ளார்.