லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்.) ரி-20 தொடரின், இறுதிப் போட்டிக்கான இரண்டாவது தகுதிப் போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணியும் தம்புள்ளை ஜியண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இப்போட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7.30 மணிக்கு ஹம்பாந்தோட்டை மைதானத்தில் நடைபெறவுள்ளது.
நடப்பு தொடரை பொறுத்தவரை ஜப்னா கிங்ஸ் அணி, தம்புள்ளை ஜியண்ட்ஸ் அணியை தான் எதிர்கொண்ட இரண்டு லீக் போட்டிகளிலும் வெற்றிகொண்டது.
எனினும், இன்றையப் போட்டியில் வெற்றி யாருக்கு என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…