இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 200ஐக் கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இவர்களில் 77 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக கர்நாடகாவை சேரந்த ஒருவருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து மஹாராஷ்டிரா, டெல்லி, கேரளா, தமிழகம், குஜராத், தெலுங்கானா, ஆந்திரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கும் ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.