பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரண்டு நாட்கள் பயணமாக இந்தியாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
தனிப்பட்ட விஜயமாக இன்று (வியாழக்கிழமை) காலை நாட்டிலிருந்து சென்றதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்ததாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கோவிலுக்குச் சென்று ஆசி பெறுவதற்காக திருப்பதி சென்ற பிரதமர், சனிக்கிழமை நாடு திரும்பவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இந்த விடயம் குறித்து பிரதமர் அலுவலக அதிகாரிகளை தொடர்புகொண்டபோது, இந்த விஜயத்தை உறுதி செய்ததுடன், இது தனிப்பட்ட விஜயம் எனவும் அதற்காக அரச நிதி எதுவும் பயன்படுத்தப்படவில்லை எனவும் தெரிவித்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.