சீனாவின் வடக்கு பிராந்தியமான ஷின்ஜியாங்கில் கைது செய்யப்பட்ட உய்குர் பெண் ஒருவர், தொழிலாளர் முகாமில் காவலில் வைக்கப்பட்டிருந்த போது அனுபவித்த உடல் ரீதியான சித்திரவதைகளை நினைவு கூர்ந்து நியூயோர்க் போஸ்ட்டிடம் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
‘தன்மீது கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், எனது உடற்பாகங்களுக்கு மின்சாரம் செலுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாகவும்’ அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜியாவுதுன் என்ற குறித்த பெண்ணின் துன்பக்கதையானது, சீனாவில் ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் ஆட்சிக்காலத்தில் துருக்கிய வேர்களைக் கொண்ட சிறுபான்மை முஸ்லிம் சமுகமான உய்குர்கள் மீது மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான சித்திரவதைகளை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
‘அவர்கள் எனக்கு கருத்தடை மாத்திரைகள் கொடுத்தனர். அதனால் தான் என்னால் இப்போது குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது என்று நான் உறுதியாக நம்புகிறேன்’ எனவும் குறித்த பெண் கவலையுடன் குறிப்பிட்டுள்ளார்.
2016ஆம் ஆண்டிலிருந்து, உய்குர்கள் வலுக்கட்டாயமாக மறுகல்வி முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர், அங்கு அவர்கள் சித்திரவதை, கற்பழிப்பு மற்றும் கொலைசெய்யடுதல் போன்வற்றுக்கு உள்ளாவதாக பல்வேறு அறிக்கைகள் வெளியாகியிருந்தன.
அதேநேரம், முகாம்களில் அடைத்து வைக்கப்படும் உய்குர்கள் தொழிலொன்றைக் கற்றுக்கொள்வதற்கும் அவர்களின் தேசபக்தியை வலுப்படுத்துவதற்கும் வலிந்து உள்ளீர்க்கப்படுகின்றார்கள் என நியூயோர்க் போஸ்ட் தெரிவித்துள்ளது.
2017 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட குறித்த பெண், தடுத்து வைக்கப்பட்டார். கைது செய்யப்படுவதற்கு முன்னதாக, அவரது கடவுச்சீட்டை மாற்றுமாறு பொலிஸ் அதிகாரிகளால் தொடர்ச்சியாக கட்டாயப்படுத்தப்பட்டு, வந்த நிலையில் திடீரென்று அவர் தங்கியிருந்த கிராமத்திலிருந்து சுமார் 30 நிமிடங்களில் சிறை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு, குறித்த பெண் தேசபக்தியை ஏற்படுத்துவதற்கா கம்யூனிஸ்ட் கட்சியின் பாடல்களைப் பாடுமாறு வற்புறுத்தப்பட்டுள்ளார். மேலும் அப்பெண்ணுக்கு இஸ்லாம் மதம் பற்றி எதிர்மறையான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு, அவருக்கு வயிற்றில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும், அவ்வப்போது மயக்கமடைந்துள்ளார் எனவும் தகவல்கள் கூறுகின்றன.
2020இல் அங்கிருந்து வெளியே வந்த ஜியாவுதுன் மருத்துவச் சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.
“எனது நிலைமையை உணர்ந்து கிராமத்தில் இருந்தவர்கள் என்னை அமெரிக்க மருத்துவமனைக்கு அனுப்பினார்கள். அவர்கள் இல்லையென்றால் நான் இறந்திருக்கலாம்“ எனவும் குறித்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
‘நான் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் கழித்து, பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டேன். அங்கு பயிற்சியை முடிக்க வேண்டும் என அழுத்தமளிக்கப்பட்டது.
பின்னர் மறுகல்வி முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டேன். அங்கு எனக்கு தலைமுடி கத்தரிக்கப்பட்டு பல துன்புறுத்தல்கள் செய்யப்பட்டன. நான் ஒரு மிருகத்தைப் போல நடத்தப்பட்டேன்’ என அவர் மிகுந்த கவலையுடன் குறிப்பிட்டுள்ளார்.