சீனாவின் இரண்டு ரோந்துக் கப்பல்கள் ஜப்பான் கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்துள்ளதாக கூறப்படுகின்றது.
சர்ச்சைக்குரிய சென்காகு தீவுகளுக்கு அருகே ஜப்பானின் கடல் எல்லைக்குள் சீன ரோந்துக் கப்பல்கள் பிரவேசித்துள்ளமையினை உள்ளூர் ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
குறித்த தீவுகளுக்கு அருகிலுள்ள பகுதிகளை ஜப்பான் தங்களின் சொந்தப் பிரதேசம் என கூறுகின்றன. இதன்காரணமாக அதற்குள் பிரவேசிப்பதற்கு முன்னதாக ஜப்பானின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும்.
எனினும், குறித்த கடல் எல்லையின் அடுத்தடுத்த பகுதியில் சீனாவின் இரண்டு கப்பகள் பிரவேசித்துள்ளன.
ஆசிய பொருளாதாரத்தில் சக்தி மிக்க நாடுகளான ஜப்பான், சீனா ஆகியன சென்காகு தீவுகள் மீது பிராந்திய உரிமைகளை நீடித்துள்ளன. ஜப்பான் தீவுகளின் மீது அதன் இறையாண்மையை வலியுறுத்துகிறது.
ஜப்பானின் உரிமம் கோரும் விடயமானது, 1895 முதல் நடைமுறையில் உள்ளது, அதேநேரத்தில் சீனா தரப்பு, 1783 மற்றும் 1785இல் வெளியான வரைபடங்களை சுட்டிக்காட்டி தீவுகளை சீனப் பிரதேசமாக குறிப்பிடுகிறது.
2012இல் ஜப்பானிய அரசாங்கம் ஐந்து தீவுகளில் மூன்றைத் தனியார் உரிமையாளரிடமிருந்து வாங்கியபோது இந்தச் சர்ச்சை மேலும் அதிகரித்து தற்போது பதற்ற நிலைமையை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.