தமிழகத்தில் மேலும் 100 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அசைமச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
16 ஆவது மெகா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘தமிழகத்தில் இதுவரை 8.14 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 34 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
அதில், 12 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்; 22 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுடன் தொடர்பில் இருந்த 100க்கும் மேற்பட்டோருக்கு ஒமைக்ரான் அறிகுறி கண்டறியப் பட்டுள்ளது. அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டு நலமுடன் உள்ளனர்.
தமிழகத்தில், 95 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி போடாமல் உள்ளனர். அவர்கள் விரைந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளனர்.