நாகலாந்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் மேலும் 6 மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாகலாந்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் இன்று (வியாழக்கிழமை) முதல் நீட்டிக்கப்படுகிறது.
இதன்படி சந்தேகத்தின் அடிப்படையில் பிடியாணை இல்லாமல் ஒருவரை கைது செய்யவும், அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொள்ளவும், சட்டத்திற்கு புறம்பாக நடந்துக்கொண்டால் அல்லது ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் வைத்திருந்தால் துப்பாக்கிச்சூடு நடத்தவும் ஆயுதப்படைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆயுதப் படையினர் அத்துமீறி செயல்பட்டதாக கருதினால் மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.