• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
வெற்றி யாருக்கு? இந்தியா- தென்னாபிரிக்கா முதல் டெஸ்டின் இறுதிநாள் ஆட்டம் இன்று!

Anoj by Anoj
2021/12/30
in கிரிக்கெட், விளையாட்டு
69 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், நான்காம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி நேற்றைய நான்காம் நாள் ஆட்டநேர முடிவில், இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் தென்னாபிரிக்கா அணி, 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 94 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆட்டநேர முடிவில், டீன் எல்கர் 52 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தார்.

சென்சூரியனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 327 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கே.எல். ராகுல் 123 ஓட்டங்களையும் மாயங் அகர்வால் 60 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், லுங்கி ங்கிடி 6 விக்கெட்டுகளையும் ரபாடா 3 விக்கெட்டுகளையும் மார்கோ ஜென்ஸன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாபிரிக்கா அணி, 197 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டெம்பா பவுமா 52 ஓட்டங்களையும் குயிண்டன் டி கொக் 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மொஹமட் ஷமி 5 விக்கெட்டுகளையும் பும்ரா மற்றும் தாகூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சிராஜ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 130 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியக் கிரிக்கெட் அணி, 174 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிக்கு 305 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரிஷப் பந்த் 34 ஓட்டங்களையும் கே.எல். ராகுல் 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ரபாடா மற்றும் மார்கோ ஜென்ஸன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளையும் லுங்கி ங்கிடி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 305 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி, நேற்றைய நான்காம் நாள் ஆட்டநேர முடிவில், 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 94 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இன்னமும் 6 விக்கெட்டுகள் மற்றும் ஒருநாள் மீதமிருக்க 211 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி, இன்றைய இறுதிநாள் ஆட்டத்தில் தென்னாபிரிக்கா அணி, துடுப்பெடுத்தாடவுள்ளது.

Related

Tags: இந்தியக் கிரிக்கெட் அணிகே.எல். ராகுல்சென்சூரியன்டெம்பா பவுமாதென்னாபிரிக்க கிரிக்கெட் அணி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மட்டக்களப்பிலிருந்து பனம் உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை!

Next Post

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்று சுற்றிவளைப்பு – ஐந்து பெண்கள் கைது!

Related Posts

2026 உலகக் கிண்ணம்; ஃபிஃபாவிடம் ஈரான் முன்வைத்த கோரிக்கை!
ஆசிரியர் தெரிவு

2026-03-17
இலங்கை அணி முதல் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 30 ஆண்டுகள்

இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா
டெனிஸ்

2026-03-16
இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார் ஜனிக் சின்னர்

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!
உலகம்

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

2026-03-15
பாதுகாப்பு கருதி பஹ்ரைன், சவுதி அரேபிய F1 பந்தயங்கள் ரத்து: கார் பந்தய கூட்டமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
விளையாட்டு

பாதுகாப்பு கருதி பஹ்ரைன், சவுதி அரேபிய F1 பந்தயங்கள் ரத்து: கார் பந்தய கூட்டமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

2026-03-15
Next Post
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்று சுற்றிவளைப்பு – ஐந்து பெண்கள் கைது!

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்று சுற்றிவளைப்பு - ஐந்து பெண்கள் கைது!

சிறப்பான போக்குவரத்து சேவை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் – டக்ளஸ்

சிறப்பான போக்குவரத்து சேவை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் - டக்ளஸ்

டெல்டா- ஒமிக்ரோன் திரிபுகள் கொவிட் பேரலையை ஏற்படுத்துகிறது: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01

18 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் 5 சீனப் பிரஜைகள் கைது!

0
QR முறையைத் தவிர்த்து செயல்படும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு எச்சரிக்கை!

ஈரான்  மீது இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல் – ஈரானின் துணை இராணுவப் படையான ‘பசிஜ்’ (Basij) அமைப்பின் தளபதி உயிரிழப்பு!

ஹெரோயினுடன் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகு; இருவர் கைது!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்காக ஆஜர்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.