சௌதம் பாடசாலை மாணவர்களுக்கு 11.6 மில்லியன் மதிப்பிலான புதிய 2 மாடிக் கட்டடம் ஒன்றிணை நிர்மாணிக்க இ.தொ.காவின் உப தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதிபர், ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் செந்தில் தொண்டமானிடம் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, புதிய 2 மாடிக் கட்டடம் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக் காலப்பகுதி என்பதால் மாணவர்களின் நலன் கருதி பாடசாலை கட்டடம் மாணவர்களின் உடனடி பயன்பாட்டிற்காக பாடசாலை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
புதிய கட்டடத்தை ஆய்வு செய்த பிறகு, மாணவர்களுடன் கொரோனா விழிப்புணர்வு திட்டங்கள் மற்றும் அவர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் செந்தில் தொண்டமான் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.