மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக அரசாங்கம் எந்தவொரு கலந்துரையாடலிலும் ஈடுபடவில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு எந்தவொரு நாடும் அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.
திருகோணமலை எண்ணெய் களஞ்சியத்தை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தத்துடன் மாகாண சபைத் தேர்தலுக்கு தொடர்பில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும் இரு நாடுகளுக்கு இடையிலான குறித்த ஒப்பந்தம் அடுத்த வாரம் கைச்சாத்திட வாய்ப்புள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.