முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று (செவ்வாய்க்கிழமை) கல்வி அமைச்சுக்கு விஜயம் செய்தார்.
இதன்போது சுசில் பிரேமஜயந்தவின் பதவி நீக்கம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதில் வழங்குவதை அமைச்சர் தினேஷ் குணவர்தன தவிர்த்தார்.
அரசாங்கத்தினால் இவ்வாறான தீர்மானங்களை முன்னெடுக்க முடியுமா?, பதவி நீக்கம் தொடர்பாக அமைச்சர்கள் அமைதி காத்தது ஏன்?, அமைச்சர் தினேஷ் குணவர்தனவிற்கு பயமா? என ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன, இந்த விடயத்தில் தான் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் இந்த விடயத்தில் அரசாங்கதிற்குள் பிளவு ஏற்படவில்லை என்றும் கூறினார்.
மேலும் சுசில் பிரேமஜயந்தவின் பதவி நீக்கம் குறித்த கேள்விக்கு அவரே பதிலளிக்க வேண்டும் என்றும் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருந்தார்.