சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் காணப்படும் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவதற்கு உறுதியாக இருப்பதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ சென்ஹொங் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ சென்ஹொங்வுக்கும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கும் இடையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இரண்டு நாடுகளுக்கு இடையில் முன்னெடுக்கப்பட்டு வரும் வர்த்தக மற்றும் கலாசார ரீதியிலான தொடர்புகளை பலப்படுத்தவும் புதிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவும் தாம் தயாராக இருப்பதாகவும் சீன தூதுவர் கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து இலங்கைக்கு சீனா தொடர்ந்து வழங்கிவரும் ஒத்துழைப்புக்கு சபாநாயகர் நன்றி பாராட்டினார்.
குறித்த சந்திப்பில் நாடாளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹனதீரவும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.