நாட்டிற்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு நிதி பற்றாக்குறை காணப்படுவதாகவும் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
நிலவும் மின்சார நெருக்கடி தொடபாக இன்று (திங்கட்கிழமை) கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மின்சார பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் மின்சார சபை மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் சம்பந்தப்பட்ட அமைச்சர் கலந்துரையாடுவர் என்றும் தெரிவித்தார்.
எண்ணெய் இறக்குமதிக்கான நிதிப் பற்றாக்குறையே பிரதான பிரச்சினை எனவும், இதனை மக்களிடம் மறைக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இருப்பினும், நிலைமையை சமாளிப்பதாகவும் ஏப்ரல் மாதத்திற்குள் இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான வேலைத்திட்டத்தை நிதியமைச்சு வகுத்துள்ளது என்றும் திலும் அமுனுகம குறிப்பிட்டார்.