ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எவருக்கும் சொந்தமானது அல்ல என அக் கட்சியின் பிரதித் தலைவர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
எனவே அரசாங்கத்தில் இருந்து விலகுவது தொடர்பாக எவரும் தீர்மானம் எடுக்க மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதியை ஆதரித்து, தமது உதவியுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றே அரசாங்கத்தை அமைத்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு அமையவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்துடன் இணைந்தது என்றும் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.
எனவே அரசாங்கத்தில் சேருவது அல்லது வெளியேறுவது குறித்து தனியொருவர் முடிவெடுக்க முடியாது என்றும் அதற்கு இடமளிக்க போவதில்லை என்றும் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.