இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, இந்தியாவில் இருந்து மிளகாய் ஏற்றுமதி செய்பவர்களை கடும் சிக்கலில் தள்ளியுள்ளது.
இலங்கையில் மிளகாய் இறக்குமதியாளர்கள் கடந்த பல மாதங்களாக இந்திய வர்த்தகர்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்தாமையினால் அங்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து ஏற்றுமதியாளர்களுக்கு இந்திய மதிப்பில் 250-300 கோடி ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடனை செலுத்தாதது குறித்து இதுவரை முறைப்பாடுகள் எதுவும் பதிவாகவில்லை என ஆதாரங்களை மேற்கோளிட்டு இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அவ்வாறு முறைப்பாடு தெரிவித்தால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய பணம் கிடைக்காமல் போய்விடலாம் எனவும் விநியோகஸ்தர்கள் அஞ்சுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பரஸ்பர பேச்சுவார்த்தை மூலம் நெருக்கடிக்கு தீர்வு காணமுடியும் என நம்புவதாக தெரிவித்துள்ள அவர்கள் தேவைப்பட்டால், வெளிவிவகார அமைச்சின் ஆதரவை நடவுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
முக்கியமாக ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து இந்திய மிளகாய்ப் பங்குகளை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளில் இலங்கையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.