நாட்டில் ஒரு மணித்தியால மின்துண்டிப்பை அமுலாக்கும் நடவடிக்கை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளது.
அதற்கமைய, மாலை 5.30 தொடக்கம் இரவு 9.30 வரையான காலப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரத்திற்கு இனிவரும் நட்களிலும் மின் துண்டிப்பு ஏற்படுமென அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் மின்சாரம் துண்டிக்கப்படக்கூடிய நேரம் மற்றும் இடங்கள் தொடர்பான விபரங்களை மின்சார சபை நேற்று முன்தினம் வெளியிட்டது.
அத்தோடு, நேற்றைய தினம் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது எனவும் மின்சக்தி அமைச்சு நேற்று அறிவித்திருந்தது.
எனினும் வத்தளை, கல்கிசை, இரத்மலானை, நுகேகொடை, அக்குரஸ்ஸ, பிபில, கெக்கிராவ, மாலபே உள்ளிட்ட சில பகுதிகளில் நேற்றைய தினம் மின் தடை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே, வலய ரீதியான மின் துண்டிப்பு அமுலாக்கும் நடவடிக்கை நேற்று முதல் ஆரம்பமாகிள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் மின்சாரம் துண்டிக்கப்படும் நேரம் குறித்த முழுமையான அறிவிப்பு!