ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் தொடர்ந்தும் சிறுமைப்படுத்தினால் அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்பது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் கூடி கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் தொடர்ந்தும் அரசாங்கத்தை விமர்சித்து வரும் நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அரசாங்கத்தில் இருந்து நீக்குவது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பலம் வாய்ந்த தலைவர்கள் சிலரும் கலந்துரையாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எம்.பி.க்கள் அண்மைக்காலமாக அரசாங்கத்திற்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்துள்ளமையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், தற்போது அமைச்சுப் பதவிகளை வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்பினால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.