வட கொரியாவின் அண்மைய தொடர்ச்சியான ஏவுகணை சோதனைகளுக்குப் பதிலடியாக, நாட்டின் 5 அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.
வட கொரியாவின் ஏவுகணைத் திட்டத்துக்குத் தேவையான பொருள்கள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பெற்றுத் தந்த 5 அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுவதாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, வட கொரிய ஆயுதத் தயாரிப்பு திட்டங்களுக்கு உறுதுணையாக இருக்கும் மேலும் ஒரு வட கொரியர், ஒரு ரஷ்யர், ஒரு ரஷ்ய நிறுவனம் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுவதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒலியைப் போல் 5 மடங்கு வேகமான (ஹைப்பர்சோனிக்) ஏவுகணையை மூன்றாவது முறையாக கடந்த செவ்வாய்க்கிழமை பரிசோதித்துப் பார்த்ததாக வட கொரியா அறிவித்தது.
அதற்குப் பதிலடியாகவே வட கொரிய அதிகாரிகள் மீது அமெரிக்கா தற்போது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.