பிரித்தானியாவில் மேலும் 81,713 கொரோனா தொற்று நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில் கடந்த டிசம்பர் 15 ஆம் திகதிக்கு பின்னர் பதிவாகிய குறைந்த நாளாந்த எண்ணிக்கை என தரவுகள் காட்டுகின்றன.
ஒமிக்ரோன் தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானியாவில் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
குறிப்பாக நேற்றய நிலவரப்படி கடந்த ஏழு நாட்களில் 1,843 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இது முந்தைய வாரத்தை விட 45% உயர்வு என்றும் தரவுகள் காட்டுகின்றன.
இந்நிலையில் தாம் புதிய கட்டத்தை நோக்கி நகர்வதாகவும் 2022 இல் தொற்றுநோய்க்கு முன்பு இருந்த வாழ்க்கை முறைக்கு திரும்புவோம் என நம்புவதாகவும் லிவர்பூல் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் பிரிவின் தலைவரான பேராசிரியர் ஜூலியன் ஹிஸ்காக்ஸ் கூறியுள்ளார்.
ஜனவரி 6 ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில், இங்கிலாந்தில் 15 பேரில் ஒருவருக்கு கொரோனா இருப்பதாகவும், பிரித்தானியாவின் மற்ற பகுதிகளில் 20 பேரில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ONS தகவல்கள் தெரிவிக்கின்றன.