இந்திய டெஸ்ட் அணியின் தலைவர் பதவியில் இருந்து உடனடியாக விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.
2014ஆம் ஆண்டில் அஸ்ரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை விராட் கோலி முதல் முறையாக வழி நடத்தினார்.
பின்னர் அந்த பதவியில் தொடர்ந்த அவர் இறுதியாக இந்தியா ஏழு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த கேப்டவுனில் இடம்பெற்ற தென்னாபிரிக்க அணியுடனான போட்டி வரை தலைவராக செயற்பட்டார்.
இந்நிலையில் டுவிட்டரிபதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள கோலி, அணியை சரியான திசையில் கொண்டுசெல்ல 7 வருடங்களாக விடாமுயற்சியுடன் தினமும் போராடியதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இவ்வளவு நீண்ட காலத்திற்கு அணியை வழிநடத்தும் வாய்ப்பை வழங்கியதற்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பட்டு சபைக்கு அவர் நன்றியும் தெரிவித்தார்.
இதேவேளை இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய திறமையான தனி நபராக தன்னைக் கண்டறிந்த எம்.எஸ் டோனிக்கு நன்றி என்றும் விராட் கோலி தெரிவித்துள்ளார்.