உணவுத் தட்டுப்பாடு தொடர்பில் வீண் அச்சம் கொள்ள வேண்டியதில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சர் ரமேஷ் பத்திரண இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “உரப்பிரச்சினையால் உற்பத்தி ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளது. அது நிவர்த்தி செய்யப்படும்.
அத்துடன், தட்டுப்பாடு ஏற்படாத வகையில் இறக்குமதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மறுபுறத்தில் வீடுகளில் மரக்கறி உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்யும் நடவடிக்கையும் ஆரம்பமாகியுள்ளது.
அரச தரப்பிலும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, உணவு தட்டுப்பாடு தொடர்பில் வீண் அச்சம் கொள்ள வேண்டியதில்லை.” எனக் குறிப்பிட்டுள்ளார்.