சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் பிணை மனுவை எதிர்க்கப் போவதில்லை என சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தன்னை பிணையில் விடுவிக்குமாறு கோரி சட்டத்தரணி சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதன்போதே சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுதர்ஷன சில்வா இதனைத் தெரிவித்தார்.
ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் ஜனவரி 28 ஆம் திகதி புத்தளம் மேல் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்நிலையில் சீராய்வு மனுவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 09 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.