மீண்டும் சோவியத் ஒன்றியத்தை உருவாக்க ரஷ்யா விரும்புவதாக பிரித்தானியா குற்றம் சாட்டியுள்ளது.
சிட்னியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸ் இந்த கருத்தினை வெளியிட்டார்.
அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில் அவரது எச்சரிக்கை வந்துள்ளது.
உக்ரைன் மீது படையெடுத்தால், ஆப்கானிஸ்தானை சோவியத் கைப்பற்றியது போன்று பயங்கர உயிரிழப்பு ஏற்படும் என்றும் எச்சரித்தார்.
மேலும், ஜனாதிபதி விளாடிமிர் புடினை பின்வாங்குமாறு வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸ் வலியுறுத்தினார்.
ரஷ்யா ஆக்கிரமிப்புக்கு திட்டமிடுவதாக மறுக்கிறது. ஆனால் உக்ரைனுடனான தனது எல்லைக்கு அருகில் 100,000 துருப்புக்களை நகர்த்தியுள்ளது.
அத்துடன், நேட்டோவின் தலைவர் ஐரோப்பாவில் ஒரு புதிய மோதலுக்கான உண்மையான ஆபத்து இருப்பதாக எச்சரித்துள்ளார்.
உக்ரைன் ஒருபோதும் நேட்டோவில் சேர அனுமதிக்கப்படக்கூடாது என்றும் கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ இராணுவ நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்றும் புடின் வலியுறுத்தினார்.