நாட்டில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்தினை கடந்துள்ளது.
நேற்றைய தினம்(வெள்ளிக்கிழமை) மேலும் 840 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இலங்கையில் நாளாந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் 800ஐ கடந்துள்ளது.
இதன் காரணமாக நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 203 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், நேற்றைய தினம் 17 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 272 ஆக அதிகரித்துள்ளது.
இந்தப் பின்னணியில், நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாய நிலை குறித்து சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையினை கட்டுப்படுத்தும் வகையில் அனைவரும் சுகாதார வழிகாட்டல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பூஸ்டர் டோஸினை அனைவரும் கட்டாயமாக பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.