அமைச்சர் சரத் வீரசேகர, நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் இருந்து அங்கொடவிலுள்ள தேசிய தொற்று நோய்களுக்கான நிறுவகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
தொற்றுநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
எனினும் அவரது உடல்நிலை சீராக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமைச்சர் சரத் வீரசேகரவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.














