நீர் விநியோக கட்டணத்தை ஆறு மாதங்கள் அல்லது அதற்கும் மேலாக செலுத்தாதவர்களுக்கு நீர் விநியோகத்தை துண்டிக்கும் செயற்பாடு மாவட்ட மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் 7 ஆயிரத்து 200 மில்லியன் ரூபாயை நீர் பாவனையாளர்கள் செலுத்தத் தவறியுள்ளதாக அந்த சபையின் உதவிப் பொது முகாமையாளர் ஏகநாயக்க வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
எனவே, ஆறு மாதங்கள் அல்லது 2000 ரூபாய்க்கு மேல் நிலுவையாகவுள்ள நீர் பட்டியலுக்கான நீர் விநியோகத்தை துண்டிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
27 இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு மாதந்தம் 50 மில்லியன் கனமீட்டர் குடிநீரை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை வழங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.