ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கிடையே பயணம் செய்வதற்கான கொரோனா விதிமுறைகளில் திருத்தங்கள் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு பயணி எந்த நாட்டிலிருந்து வருகிறார் என்பதைப் பாராமல் அவர் தடுப்பூசி போட்டு முடித்திருக்கிறாரா அல்லது நோய்வாய்ப்பட்டிருக்கிறாரா என்பது குறித்து மாத்திரமே கவனம் செலுத்தப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
இதற்கமைய தான் தடுப்பூசி போட்டு முடித்துள்ளமை அல்லது கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளமையினை நிருபிக்கும் நிரூபிக்கும் சான்றைக் காட்டவேண்டும் எனவும், குறித்த பரிந்துரையைப் பின்பற்றுவது கட்டாயமல்ல எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், அதிகமான கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியிருக்கும் பகுதிகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்கும்படி மக்கள் கேட்டுக்கொள்ளப்படுவார்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கிடையே பயணம் செய்யும்போது ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தவிர்ப்பதற்குப் பயண விதிமுறைகளை மறுஆய்வு செய்ய ஐரோப்பிய அமைச்சர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.