கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸின் பரவல் வெகுவாக அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
மேலும் இதற்கு அடுத்த இடத்தில் கொழும்பு மாவட்டம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவிலிருந்து திரிபடைந்த ஒமிக்ரோன் வைரஸினாலேயே பரவல் தீவிரமடைந்திருக்கலாமெனவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
அறிகுறிகள் இல்லாமல் நோயை ஏற்படுத்துதலே ஒமிக்ரோனின் தனித்தன்மை என்றபோதும் அவ்வாறு அறிகுறிகள் தென்படாவிட்டாலும் தொற்றுக்குள்ளானவருக்கோ அல்லது பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கோ உயிராபத்தும் ஏற்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடு வழமை நிலைமைக்கு திரும்பியதே வைரஸ் பரவல் அதிகரிப்பிற்கு காரணமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.